2025-2026 ஆம் கல்வியாண்டில் அச்சடிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் இல்லாத (வழக்கொழிந்தவை) 1 முதல் 3 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்கள் பல்வேறு போட்டித்தேர்வுகள் எழுதும் தேர்வர்களின் பயன்பாட்டிற்கென 30% கழிவு விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை 3.12.2026 வரை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வட்டார அலுவலகங்கள் மற்றும் மாவட்டம் தோறும் நடைபெறும் புத்தகத் திருவிழாக்களில் கிடைக்கும்.
2026-27 ஆம் ஆண்டின் முதல் பருவம் 1 முதல் 3 ஆம் வகுப்பு (தமிழ்வழி, ஆங்கில வழி மற்றும் சிறுபான்மை மொழிப் பாடநூல்கள்) 25.05.2026 தேதியிலிருந்தும், மற்றும் 1 முதல் 3 ஆம் வகுப்பு ஆசிரியர் கையேடுகள் 27.05.2026 ஆம் தேதியிலிருந்தும் பள்ளிகளுக்கு விற்பனை தொடங்கப்படுகிறது”.
2026-27 ஆம் ஆண்டின் 4 முதல் 7 ஆம் வகுப்பு முதல் பருவம், 8, 11 ஆம் வகுப்பு அனைத்து
பாடநூல்களும் (தமிழ்வழி, ஆங்கில வழி) மற்றும் 4 முதல் 12 ஆம் வகுப்பு சிறுபான்மை மொழிப் பாடநூல்கள் பள்ளிகளுக்கு
14.05.2026 தேதிமுதல் விற்பனை தொடங்கப்படுகிறது”.
2026-27 ஆம் ஆண்டின் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆண்டு தமிழ் பாடநூல்கள் மற்றும் 9,
10,
12 ஆம் வகுப்பு அனைத்து பாடநூல்களும் (தமிழ் வழி , ஆங்கில வழி) பள்ளிகளுக்கு 10.04.2026 தேதி முதல் விற்பனை
தொடங்கப்படுகிறது.
1.தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கிடங்கு, 100
அடி வேளச்சேரி - தரமணி இணைவழி சாலை, திருவான்மியூர், சென்னை- 600 041.
2.அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை-600085.
பாடநூல்கள் வாங்க வருபவர்கள், ‘கோவிட்19' தொடர்பான வழிகாட்டுதலை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை
கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.